/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழங்குடி மக்களுக்கு இன சான்று மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பேட்டி

ADDED : அக் 04, 2025 04:01 AM
பழநி: ''-பழங்குடி மக்களுக்கு இனச் சான்று வழங்க வேண்டும்'' என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் டெல்லி பாபு கூறினார்.
பழநியில் அவர் கூறியதாவது :வன பாதுகாப்பு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மலைப்பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். அதோடு கனிம வளங்களை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்துவதை மாநாடு மூலம் வலியுறுத்த உள்ளோம். பழங்குடியின மக்களுக்கு இனச் சான்று வழங்க அரசு ஆணை உள்ளது. ஆனால் அவற்றை அமல்படுத்தவில்லை. பெற்றோர்களுக்கு இன சான்று உள்ளபோது குழந்தைகளுக்கு இன சான்று வழங்கலாம் என்ற அரசாணை உள்ள நிலையில் இதுவரை இன சான்று வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். பழங்குடியின மக்கள் 60 சதவீதம் பேர் வீடு அற்றவர்களாக உள்ளனர். அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளனர். ஏகலைவா மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது என்றார்.