/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிட்டி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ மாணவர்களுக்கு பாராட்டு
/
சிட்டி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ மாணவர்களுக்கு பாராட்டு
சிட்டி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ மாணவர்களுக்கு பாராட்டு
சிட்டி ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 26, 2024 05:57 AM

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் மாநில டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வான புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில டேக்வாண்டோ போட்டிகள் சென்னை ஜேப்பியார் பல்கலையில் நடைபெற்றது. கொசவபட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாலமுருகன் தங்கப் பதக்கம், நர்மதா, தருண் கார்மேல், தர்னிஷ், டான் போஸ்கோ வெள்ளிப்பதக்கம், ஜெய்சின் கிறிஸ்டினா, ஜோஸ் கேத்தரின் வெண்கலப் பதக்கம் வென்றனர். 16 ஆண்டுகளுக்கு மேலாக மாநில போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. வெற்றி மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஜான்சன் எடின் பர்க், தலைமையாசிரியர் செல்வநாயகம், உடற்கல்வி ஆசிரியர் சேக்ஸ் ராஜ் , டேக்வாண்டோ பயிற்சியாளர் ஜெயசீலன் பாராட்டி பரிசு வழங்கினர்.

