/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் ஏமாற்றம்: விலை இருந்தும் விளைச்சல் இல்லை

ADDED : ஜன 26, 2024 05:46 AM

மானாவாரியில் நடப்பட்ட மக்காச்சோளம் 50 சதவீதம் மட்டுமே மகசூல் கொடுத்துள்ள நிலையில் நல்ல விலை இருந்தும் போதிய விளைச்சல் இல்லாத விவசாயிகளுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ரெட்டியார்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, ஸ்ரீராமபுரம் உட்பட பல இடங்களில் மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்படுகிறது.
இந்தாண்டும் பருவமழை நன்றாகப் பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மானாவாரியாக பல ஏக்கரில் மக்காச்சோளம் நடவு செய்திருந்தனர். அவ்வப்போது பெய்த சிறு மழை காரணமாக பயிர் முளைத்து கதிர்விடும் நேரத்தில் மழை பெய்யவில்லை. இதனால் மக்காச்சோளப் பயிர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகியது. இவற்றில் இருந்து தப்பிய கதிர்கள் சுருங்கி போனதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனேக இடங்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஒட்டு மொத்தமாக 50 சதவீதம் மகசூல் மட்டுமே கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மகசூல் குறைந்து வரத்து இல்லாததால் விலை குறையாமல் 100 கிலோ ரூ.2300 க்கு விற்கிறது.
கடந்தாண்டு குறைந்தபட்சமாக ரூ.1500 க்கு விற்றது. தற்போது விலை இருந்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.