/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராணுவ விமான சாகச பயிற்சி; வடமதுரை மக்கள் வியப்பு
/
ராணுவ விமான சாகச பயிற்சி; வடமதுரை மக்கள் வியப்பு
ADDED : செப் 16, 2025 12:22 AM
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்று காலை ராணுவ விமானம் நீண்ட நேரம் சாகச பயிற்சியில் ஈடுபட்டதால் அதிக இரைச்சல் ஏற்பட்டது. விமான சாகசங்களை கண்டு மக்கள் வியப்புற்றனர்.
கோயம்புத்துார் சூலுார் ராணுவ விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக கிழக்கு திசையில் புறப்பட்டு வரும் ராணுவ விமானங்கள் திருச்சி, மதுரை விமானங்கள் பயணிக்கும் தடத்திற்கு நுழையாமல் திண்டுக்கல் வடமதுரை பகுதியில் வட்டமடித்து திரும்பி செல்லும். சில நேரங்களில் ஓரிரு முறை வட்டமிட்ட பின் திரும்பி சென்றுவிடும். அந்தநேரங்களில் விமானம் பறக்கும் திசை அடிப்படையில் அதிக சத்தம் உருவாகி பின் படிப்படியாக குறைந்துவிடும். இது இப்பகுதி மக்களுக்கு பழகிய விஷயமாக போனது.
இந்நிலையில் நேற்று காலை வடமதுரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து பல மணி நேரம் ராணுவ பயிற்சி விமானம் பறக்கும் இரைச்சல் ஏற்பட்டது. அதிக விமானங்கள் பறக்கின்றனவோ என மக்கள் வானத்தை பார்த்த போது ஒரே ஒரு பயிற்சி விமானம் சுழன்றும், பல்டி அடித்தும், ஓரே இடத்தில் பறந்தபடியும் பல்வேறு சாசகங்களை செய்தது. வானம் மேக கூட்டம் இன்றி தெளிவாக இருந்ததால் விமான சாகசங்களை மக்கள் ரசிக்க முடிந்தது.