ADDED : ஜூன் 08, 2025 04:04 AM

திண்டுக்கல் : திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன உள் விளையாட்டு அரங்கில் 25வது தேசிய சப் ஜூனியர் வூஷூ போட்டிகள் மே 26 முதல் 31 வரை நடந்தது. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 1600க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சண்டை, பாடம், ஆயுதம் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. ஜாக்கிசங்கர் தலைமையில் தமிழக அணியில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 7 மாணவர்கள், 8 மாணவிகள் கலந்து கொண்டு 4 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பிற சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதுடன் தமிழக அரசின் ஹை கேஷ் மூலம் உதவித்தொகை பெற உள்ளனர்.
பதக்கம் வென்ற வீரர்களுக்கு பயிற்சியாளர் ஜாக்கி சங்கர், அகில இந்திய சங்க சி.இ.ஓ., சுஹெய்ல் அகமது, இன்டர்நேஷனல் ஜட்ஜ் பஹேரா, மாநில செயலளர் ஜான்சன், பொருளாளர் கவிதா திண்டுக்கல் மாவட்ட வூஷூ சங்க சார்பாக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.