ADDED : ஜூன் 19, 2025 02:58 AM
இணையத்தில் டிரான்சிட் பாஸ்
திண்டுக்கல் : குவாரிகளுக்கான டிரான்சிட் பாஸ் ஜூன் 9ம் தேதி முதல் இணைய வழியாகவே வழங்கப்பட்டு வருகிறது. பதிவுச்சான்றிதழ் பெற்றவர்கள் திண்டுக்கல்புவியியல் ,சுரங்கத்துறை அலுவலகம் செல்ல வேண்டியதில்லை இணைத்தின் மூலமாகவே அனுமதிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென கலெக்டர் சரவணன் கேட்டுள்ளார்.
..........
மாணவர் சேர்க்கை தொடக்கம்
திண்டுக்கல் : குள்ளனம்பட்டி தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்) 2025 ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை இன்று முதல் நடைபெறவுள்ளது. அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து சேரலாம். விவரங்களுக்கு நிலைய முதல்வரை நேரிலோ, 94990 55764 ல் அணுகலாம்.
.........
மீன்பிடி ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு
திண்டுக்கல் : மாவட்டத்திலுள்ள மாவூர்அணை, சிறுவன் குளம், நீலமலைக்கோட்டை, தாமரைக்குளம் நரசிங்கபுரம், ரெங்கசமுத்திரக்குளம் , தருமத்துப்பட்டி புதுக்குளம் ஆகிய 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளது. விவரங்களை www.tntenders.gov.in ல் அறியலாம். மேலும , நேருஜி நகரில் உள்ள மீன்வளம் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். மாற்றங்கள் ஏதேனுமிருப்பின் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.