ADDED : பிப் 25, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் சீலப்பாடி ம.மு.கோவிலுார் பிரிவில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளி கட்டட 2-வது மாடியில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இதன் மீது நேற்று காலை அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத நபர் கல்லை வீசி உள்ளார். தேன்கூட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.
கூடு கலைந்து தேனிக்கள் ரோட்டில் சென்றவர்களை கொட்டத் தொடங்கின. வேடசந்துார் கல்வார்பட்டி சேர்ந்த காளிமுத்து 60, அவ்வழியே டூவீலரில் வர தேனீக்கள் அவரை சூழ்ந்து கொட்டின. தடுமாறிய அவர் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் வருதற்குள் காளிமுத்து இறந்தார். தேனீக்கள் கொட்டியதில் பெண்கள் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர்.