/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முடங்கிய கழிப்பறை, சாக்கடையும் இல்லை சிரமத்தில் சின்னக்காம்பட்டி ஊராட்சி மக்கள்
/
முடங்கிய கழிப்பறை, சாக்கடையும் இல்லை சிரமத்தில் சின்னக்காம்பட்டி ஊராட்சி மக்கள்
முடங்கிய கழிப்பறை, சாக்கடையும் இல்லை சிரமத்தில் சின்னக்காம்பட்டி ஊராட்சி மக்கள்
முடங்கிய கழிப்பறை, சாக்கடையும் இல்லை சிரமத்தில் சின்னக்காம்பட்டி ஊராட்சி மக்கள்
ADDED : செப் 17, 2025 12:43 AM

ஒட்டன்சத்திரம் : பயன்பாடு இல்லாத மகளிர் சுகாதார வளாகம் , சாக்கடை வசதி இல்லாமல் சின்னக்காம்பட்டி ஊராட்சி மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
சின்னக்காம்பட்டி , சின்னக்காம்பட்டிபுதுார், ராகவநாயக்கன்பட்டி, கோமாளிப்பட்டி, நாரணப்பநாயக்கன்பட்டி கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களும் உள்ளன. சின்னக்காம்பட்டியில் உள்ள கழிப்பறை ஊருக்கு வெளியே அமைந்துள்ளதால் யாருக்கும் பயன் இல்லாத நிலயே உள்ளது. இங்கு தெருவிளக்கு வசதி இல்லை.
இதோடு தண்ணீர் வசதியும் இல்லாமல் உள்ளது. இங்குள்ள மயானத்தின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. ஊராட்சியில் சாக்கடை வசதியும் இல்லை. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் தண்ணீர் தேங்கி சகதியாக உள்ளது. விவசாயிகள் அதிகமாக கோழிகள், கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். எனவே கால்நடை மருத்துவமனைக்கு தனியாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்பது ஊராட்சி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
ஓடையை அகல படுத்துங்க என். கிருஷ்ணமூர்த்தி,பா.ஜ., முன்னாள் கிளைத் தலைவர் ,சின்னக்காம்பட்டி: மயானம் அருகே செல்லும் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடையை அகலப்படுத்த வேண்டும். தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும். அரசு பால் கொள்முதல் நிலையம் செயல்பட வேண்டும்.
ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிப்பதே இல்லை. 100 நாள் வேலை பணியாளர்களை முறையாக பயன்படுத்தி வேலை வாங்க வேண்டும். இங்குள்ள கால்நடை மருத்துவமனை முழு நேரமும் செயல்பட வேண்டும். இதையொட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இதே போல் சுகாதார நிலையமும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.
சமுதாயகூடத்திற்கு தேவை தண்ணீர் கோவிந்தராஜ், பா.ஜ., சக்தி கேந்திரா பொறுப்பாளர், நாரணப்பநாயக்கன்பட்டி : நாரணப்ப நாயக்கன்பட்டி சமுதாய கூடம் சமையலறையில் தண்ணீர் வசதி இல்லை. பலமுறை கூறியும் எந்த பயனும் இல்லை.
காலனி தெருவுக்கு தண்ணீர் தொட்டி , சமுதாயக்கூடம் தேவை. இவற்றை கட்டுவதற்கு இடவசதி உள்ளதால் நிறைவேற்றி தர வேண்டும். தேவையான இடங்களில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சியில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைத்து குடிநீர் பற்றாக்குறை உள்ள நாட்களிலும் சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.