ADDED : ஜன 28, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் செவாலியர் அகாடமியில் குடியரசு தின விழா பள்ளி தாளாளர் பாதிரியார்கள் ஆரோக்கியபிரபு, ஜான் பிரிட்டோ தலைமையில் நடந்தது.
துணை முதல்வர் ஞானசீலா வரவேற்றார். பள்ளி முதல்வர் ரோஸ்லின் தேசிய கொடியேற்றி வைத்து பேசியதாவது : சமதர்ம, சமத்துவ, சமுதாயம் என்பது இந்தியர் ஒவ்வொருவரின் லட்சியமாக வேண்டும். இந்தியாவிற்கு புகழ் சேர்க்க வேண்டிய பொறுப்பு மாணவர்களிடம் பெரிதும் உள்ளதை உறுதி ஏற்போம் என்றார். தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.