/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள்: வன்கொடுமை வழக்கில் கைது
/
போலீஸ் செய்திகள்: வன்கொடுமை வழக்கில் கைது
ADDED : ஜன 10, 2024 06:33 AM
வன்கொடுமை வழக்கில் கைது
குஜிலியம்பாறை: சிலும்பா கவுண்டனூர் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை மோட்டார் வைத்து அகற்றும் பணியில் சிலும்பாக்கவுண்டனுாரை சேர்ந்த பழனிச்சாமி 47, ஈடுபட்டார் .அப்போது அவரை தாக்கிய குஜிலியம்பாறையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜாராம் ,அவரது நண்பர்களான பாளையத்தை சேர்ந்த டிரைவர் ராகவன் ,பேரூராட்சி தற்காலிக ஊழியர் ராஜரத்தினம் உட்பட 3 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ராகவனை, டி.எஸ்.பி., துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
வேன் மோதி பலி
வடமதுரை: வேல்வார்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்த நில தரகர் மல்ஹர் சாகிப் 45. மனைவி மீராம்மாள் 40, உடன் டூவீலரில்(ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றார். டி.என்.பாறைப்பட்டி பிரிவு அருகே சென்றபோது சரக்கு வேன் மோதியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட வழியில் மல்கர் சாகிப் இறந்தார். மீராம்மாள் சிகிச்சையில் உள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை திருடிய பெண் கைது
திண்டுக்கல் :திண்டுக்கல் துரைராஜ் நகரை சேர்ந்தவர் டாக்டர் கமலா. இவரது வீட்டில் மருதாணிக்குளம் சலவையார்புரத்தை சேர்ந்த அனிதா வீட்டு வேலை செய்கிறார். கமலா வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கிருந்த 7 பவுன் செயினை அனிதா திருடினார். மேற்கு போலீசார் அனிதாவை கைது செய்து நகையை மீட்டனர்.

