/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பால் உற்பத்தி செலவினங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் தேவை : தீவனங்கள் உட்பட அனைத்தின் விலையும் அதிகரிப்பு

UPDATED : ஜூன் 16, 2025 02:49 AM
ADDED : ஜூன் 16, 2025 02:09 AM

திண்டுக்கல் விவசாய மாவட்டம் என்பதால் கால்நடை வளர்ப்புகளும் அதிகளவில் உள்ளது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தற்போது 87 ஆயிரத்து 424 லிட்டர் பால், 174 சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 27 ஆயிரத்து 500 லிட்டர் பால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பால் மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய பிற ஒன்றியங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, பல தனியார் நிறுவனங்களும் பால் கொள்முதல் செய்து வருகின்றன.
தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் தரத்தின் அடிப்படையில் ஒரு லிட்டர் பாலை ரூ.40க்கு கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது பால் உற்பத்தி அதிகரித்துள்ளதால் லிட்டருக்கு ரூ.2 வரை குறைத்து கொள்முதல் செய்கின்றன. இந்த விலை பாலை உற்பத்தி செய்யும் விலைக்கு கட்டுபடியாகாது என்பதால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.