ADDED : ஜூன் 15, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 1 மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியபோதும் லேசான புழுக்கம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லைப் பொறுத்தவரையில் ஜூன் மாத துவக்கம் முதலே கோடையை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. பகலில் கொளுத்தும் வெயில் இரவில் உஷ்ணமாக மாறி வீட்டிற்குள் புழுக்கத்தை ஏற்படுத்துவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணி முதல் மாலை 4 :00மணி வரை சீராக பெய்த மழையால் வெயிலால் தவித்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
தொடர்ந்து இரவு வரை லேசான துாரல் விழுந்த வண்ணமே இருந்தது. இந்த மழையால் குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டாலும் தொடர் வெயிலால் லேசான புழுக்கமும் இருந்தது.

