/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
/
திண்டுக்கல்லில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2024 05:26 AM

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் 75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அரசு,தனியார் அமைப்புகள் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில கலெக்டர் பூங்கொடி தேசிய கொடி ஏற்றினார். டி.ஐ.ஜி.,அபினவ்குமார், எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., சேக்முகையதீன் முன்னிலை வகித்தனர். காவல் துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை அணிவகுப்பு மரியாதை நடந்தது. முதலமைச்சர் காவலர் பதக்கம் 61 பேருக்கும், சிறப்பான பணிக்காக 60 பேருக்கும், பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கபட்டது.
விடுதலை போராட்ட தியாகிகள் அவர்தம் வாரிசுதாரர்கள், மொழிபோர் தியாகிகள் கவுரவிக்க பட்டனர். நலதிட்ட உதவிகள் வழங்கினர். சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள், வண்ண பலுான்கள் பறக்க விடப்பட்டது. எம்.பி., வேலுச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், ராணி, ஆர்.டி.ஓ., கமலக்கண்ணன், தாசில்தார்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் திருச்சி ரோட்டில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் மண்டல பொது மேலாளர் டேனியல்சாலமோன் தலைமையில் கொடியேற்றப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா எம்.பி., வேலுச்சாமி தலைமையில் நடந்தது. மேயர் இளமதி கொடியேற்றினர். துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிசந்திரன், உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், சரவணகுமார், மாநகர் நல அலுவலர் பரிதாவணி பங்கேற்றனர்.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு ராம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மல்லிகை தெருவில் உள்ள சிறுவர் பூங்காவில் தலைவர் ராஜசேகரன் தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. முன்னாள் எஸ்.பி., ராஜகோபாலசாமி தேசிய கொடி ஏற்றினார். முன்னாள் கலெக்டர் சீதாராமன் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜசேகரன், சந்திரசேகரன் பேசினர். பொருளாளர் ஷேக்முஜிபுர் ரகுமான் விழா ஏற்பாடு செய்தார். செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் செயலாளர் நாகராசன் தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. மாநில இணை செயலாளர் சுப்ரமணியன் தேசியகொடி ஏற்றினார். ரயில்வே ஓய்வூதிய மண்டல தலைவர் துரை கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார்.
திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர் தேசியகொடி ஏற்றினார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்.
திண்டுக்கல் பிள்ளையார்நத்தம்,பேகம்சாஹிபா நகரம், அசனாத் புரம் பகுதிகளில் செயல்படும் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை, துவக்க பள்ளிகளில் குடியரசு தினவிழா பிள்ளையார் நத்தம் ஊராட்சி தலைவர் உலகநாதன் தலைமையில் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வர்ஷினி வரவேற்றார். தாளாளர் ஜாகீர் உசேன், முன்னாள் பள்ளி தாளாளர் அப்துல் முத்தலீப் முன்னிலை வகித்தனர். பள்ளப்பட்டி ஊராட்சி தலைவர் பரமன், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன் பேசினர். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சின்னதம்பி தேசியகொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை அம்பிகா தேவி விழா ஏற்பாடு செய்தார். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்க பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சார்பில் குடியரசு தினவிழா தெற்கு ரத வீதி பஜனை மட அலுவலகத்தில் மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது. சிவாஜி மன்ற முன்னாள் மாவட்ட தலைவர் ஆனந்தன் தேசியகோடி ஏற்றினார். செயற்குழு உறுப்பினர் கபிலன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். காமராசர், சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார். மாணவர் பிரிவு தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.
திண்டுக்கல்: ஆர்.எம்.காலனி தாடிக்கொம்பு ரோடு அரசு ஆரம்ப பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. கவுன்சிலர் கணேசன் தேசிய கொடி ஏற்றினார்.
ஆர்.வி.எஸ்., பி.எட்., கல்லுாரியில் முதல்வர் செல்வின் தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. யோகா ஆசிரியர் மதிவாணன் தேசியகொடி ஏற்றினார்.
கே.கே.அய்யநாடார் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் வயலட் சாந்தி தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. தாளாளர் ரங்கவேல் தேசியகொடி ஏற்றினார். மாணவர்கள் லக்சனா, ஷபிகா, கேவின் பேசினர்.
பாண்டியன் நகர் ஸ்ரீகாமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குனர் நரசிங்கசக்தி தலைமையில்  நடந்தது. செயலாளர் ராமலிங்கம், ஆசிரியர் பிச்சை தேசியகொடி ஏற்றினர். முதல்வர் லதா, நிர்வாக அதிகாரி அகிலன், மாணவர்கள் ஹரிணிதேவி, தன்யா பேசினர்.
முத்தழகுபட்டி செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சகாயமேரி தேசியகொடி ஏற்றினார்.
டாக்டர் இ.என்.டி. கல்வி குழுமம் சார்பில் குடியரசு தினவிழா தாளாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. நஞ்சப்ப கவுண்டர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் கோபால், ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ.பள்ளி முதல்வர், அக்சயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வேணுகோபால் தேசியகொடி ஏற்றினர்.
வாழைக்காய்பட்டி கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சலீமா பேகம் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி முகமது ரபீக் முன்னிலை வகித்தார். முதல்வர் முத்துச்சாமி, துணை முதல்வர் கார்த்திக் பங்கேற்றனர்.
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள மேடா வித்யாலயாவில் குடியரசு தினவிழா நடந்தது. தாளாளர் வனிதா தேசியகொடி ஏற்றினார்.
திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் குடியிருப்போர் சங்கம், இளைஞர் சங்கம் சார்பில் குடியரசு தினவிழா நடந்தது. ஆடிட்டர் ஜெயராமன், கிறிஸ்டோபர் பாபு, பஷீர் அகமது தேசியகொடி ஏற்றினர்.
கொடைக்கானல் : அன்னை தெரசா மகளிர் பல்கலையில் குடியரசு தினவிழா நடந்தது. துணை வேந்தர் கலா தேசிய கொடி ஏற்றினார். உடற்கல்வி இயக்குனர் ராஜம் விழா ஏற்பாடு செய்தார்.
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் நடந்த விழாவில், நிர்வாகக்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் கொடியேற்றினார். பதிவாளர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பிரதீபா தலைமை வகித்தார். செயல் அலுவலர் செல்வராஜ் கொடி ஏற்றினார். ஆத்துர் தாசில்தார் வடிவேல் முருகன்,
காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகேசன்,  பங்கேற்றனர்.
சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. முதல்வர் திலகம் தேசியக்கொடி ஏற்றினார். தாளாளர் சிவகுமார்  பங்கேற்றனர்.
ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  தலைவர் மகேஸ்வரி  கொடி ஏற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லாரன்ஸ், தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் ஹேமலதா பங்கேற்றனர்.
ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வடிவேல் முருகன் கொடியேற்றினார்.
கன்னிவாடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ஜெயமாலு தலைமை வகித்தார். தலைவர் தனலட்சுமி, தேசிய கொடியேற்றினார். துணைத் தலைவர் கீதா முன்னிலை வகித்தார்.
கன்னிவாடி அரசு சமுதாய நல நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் ஆராதனா கொடியேற்றினார்.
ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் தலைவர் சகிலாராஜா, தேசியக் கொடியேற்றினார். செயல் அலுவலர் சிவக்குமார், துணைத் தலைவர் முருகேசன், பேரூர் முன்னாள் செயலாளர் ராஜா  பங்கேற்றனர்.
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் சிவகுருசாமி கொடியேற்றினார்.
சில்வார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி ராமமூர்த்தி கொடியேற்றினார். துணைத்தலைவர் நதியா செந்தில் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் வரவேற்றார்.
புதுச்சத்திரம் ஊராட்சியில் நடந்த விழாவில், தலைவர் லெட்சுமி தேசிய கொடி ஏற்றினார். துணைத் தலைவர் கிருஷ்ணவேணி காளியப்பன், ஊராட்சி செயலர் செந்தில்முருகன் பங்கேற்றனர்.
வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பி.தனலட்சுமி கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, ஏ.பி.டி.ஓ., ஏழுமலையான், துணைத்தலைவர் கே.தனலட்சுமி,   பங்கேற்றனர்.
வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கல்பனாதேவி முன்னிலையில் தலைவர் நிருபாராணி கணேசன் கொடியேற்றினார். இளநிலை உதவியாளர் முரளிமோகன்,  தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.
வடமதுரை : வடமதுரை கலைமகள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமு கொடியேற்றினார். தாளாளர் ஆர்.கே.பெருமாள், இயக்குனர் அருள்மணி, பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.வடமதுரை குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, கலைமகள் மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன், போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பரமன் கொடியேற்றினர்.
தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பி.டி.ஏ., தலைவர் நரசிங்கன் முன்னிலையில், தலைமைஆசிரியர் ஜான்பிரிட்டோ   கொடியேற்றினார்.
கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வயநமசி முன்னிலையில் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் கொடியேற்றினார்.
-அய்யலுார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து, எழுத்தர் மோகன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அய்யலுார் ரஞ்சித் மழலையர் துவக்க பள்ளியில் முதல்வர் மனோரஞ்சித் தலைமையில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார்.
அய்யலூர் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில்  முதல்வர் திருமாறன்  தேசியகொடியேற்றினார்.அய்யலுார் தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குனர் சாந்தி முன்னிலையில் பள்ளி தாளாளர்  ஸ்ரீதரன் கொடியேற்றினார்.-எரியோடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல்அலுவலர் சையது அபுதாகிர், தி.மு.க., நிர்வாகிகள்  செந்தில்குமார்,  கார்த்திகேயன்,  பங்கேற்றனர்.எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில்  தலைமை ஆசிரியர் நிர்மலா,  போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதன் கொடியேற்றினர்.
எரியோடு கலைவாணி மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் முன்னிலையில் நிறுவனர் சாவித்திரி கொடியேற்றினார்.கோவிலுார் தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக்குலேசன் பள்ளியில்  தாளாளர் கிருஷ்ணவேணி முன்னிலையில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார்.
புதுரோடு இ.என்.பி., மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார். முதல்வர் ராமசந்திரபிரபு, ஒருங்கிணைப்பாளர் லெஸ்சி முன்னிலை வகித்தனர்.
வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கொடியேற்றினார். பி.டி.ஓ., கள் திருமலைசாமி, பிரபாகரன் பங்கேற்றனர்.வேடசந்துார் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் மேகலா கொடியேற்றினார்.  செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், கவுன்சிலர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.வேடசந்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், காந்திராஜன் எம்.எல்.ஏ., கொடியேற்றினார். வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., இளங்கோ கொடியேற்றினார். வேடசந்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி வேளாண்மை குழு தலைவர் சரண்யா தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் நித்தியானந்தம் வரவேற்றார்.  பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் கொடியேற்றினார்.
கூவக்காபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமை வகித்தார் ஆசிரியர் சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தாதேவி கொடியேற்றினார்.வேடசந்துார் பி.வி.எம்., மெட்ரிக் பள்ளியில், பள்ளி தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். பள்ளி முதல்வர் செந்தில்குமார்  பங்கேற்றனர். நவாமரத்துப்பட்டி சாய்பாரத் கலை,அறிவியல் கல்லுாரியில்  முதல்வர் பிரான்சிஸ் கொடி யேற்றினார். கல்வியல் கல்லுாரியில் முதல்வர் நர்மதா ஸ்ரீ கொடியேற்றினார். நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பங்கேற்றார்.
வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயலட்சுமி கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., இளங்கோ கொடியேற்றினார்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துச்சாமி தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார்.  துணை தாசில்தார்கள் மணிகண்டன்,  கனகராஜ்  பங்கேற்றனர்.
நகராட்சியில் தலைவர் திருமலைசாமி தேசியக்கொடி ஏற்றினார். துணைத் தலைவர் வெள்ளைச்சாமி ,  கமிஷனர் கணேஷ், பொறியாளர் சுப்பிரமணிய பிரபு,  சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் அய்யம்மாள் கொடியேற்றினார். துணைத் தலைவர் காயத்ரிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், கிருஷ்ணன் பங்கேற்றனர்.
காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மழலையர் துவக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் தாளாளர்  கே.ரங்கசாமி தலைமை வகித்து தேசியகொடி ஏற்றினார்.
ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் திருப்பதி தேசிய கொடி ஏற்றினார். செயலர்கள் சுரேஷ்,  கண்ணன்,  மீனா பங்கேற்றனர்.பட்ஸ் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் கண்ணம்மாள் தேசிய கொடி ஏற்றினார்.  முதல்வர் பொன்கார்த்திக்  பங்கேற்றனர்.காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரத்தினம் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி பள்ளியில்  பள்ளித் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுாரி முன்னாள் பேராசிரியர் மோகனசுந்தரம் தேசிய கொடி ஏற்றினார். தாளாளர் சித்தார்த்தன், செயலர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா, பள்ளி முதல்வர் முத்துலட்சுமி,  கல்வி ஒருங்கிணைப்பாளர் பரிமளாதேவி  பங்கேற்றனர்.
தொப்பக்காவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தேசிய கொடி ஏற்றினார். ஆசிரியர் ஆனந்தம் பங்கேற்றனர்.
அம்பிளிக்கை ஜேக்கப் கிறிஸ்தவ கல்லுாரியில், முதல்வர் சுந்தர்சிங் தேசியக்கொடி ஏற்றினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் கதிரவன் பங்கேற்றனர்.
நாகணம்பட்டி அங்கன்வாடி மையத்தில்  பணியாளர் விஜயலட்சுமி தேசியக்கொடி ஏற்றினார். பணியாளர் மைதிலி பங்கேற்றனர்.
குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சீனிவாசன் கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீர கடம்பு கோபு, கற்பகம் பங்கேற்றனர்.
பாளையம் பேரூர் அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார். குஜிலியம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கலையரசன் கொடியேற்றினார்.
சி.சி.குவாரி செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் உதவி துணை தலைவர் ஜான் ஜெயக்குமார் கொடியேற்றினார். துணை பொது மேலாளர் (மனித வளம்) ஜெயப்பிரகாஷ் பங்கேற்றார்.
டி.கூடலுார் வ.உ.சி., உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் சிங்காரம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் இதயராணி, செல்வகுமார் பங்கேற்றனர். ஆலம்பாடி ஊராட்சி சத்திரப்பட்டியில் எஸ்.பி.எம்.ராமசாமி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். குஜிலியம்பாறை ஒன்றிய தலைவர் சீனிவாசன் கொடியேற்றினார். ஊர் முக்கியஸ்தர்கள் சோழராஜன், முருகேசன், தென்னரசு பங்கேற்றனர்.
கம்பன் உயர்நிலைப் பள்ளியில் அறக்கட்டளை துணை செயலாளர் பிச்சைமுத்து கொடியேற்றினார்.
தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மகாலிங்கம் கொடியேற்றினார். தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், இளநிலை உதவியாளர் அமுது பங்கேற்றனர். தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலைக் காவலர் செல்வன் கொடியேற்றினார். தலைமை காவலர் மாலதி பங்கேற்றார்.
தாடிக்கொம்பு ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில், தாளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, தலைமை ஆசிரியை ஷியாமளா  பங்கேற்றனர்.
இடையகோட்டை : நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் தேசியக்கொடி போல் அணிவகுத்து காட்டினர். தலைமை ஆசிரியர் ஜான் வில்பர் பொன்ராஜ் தேசியக்கொடி ஏற்றினார் ஆசிரியர்கள் இளங்கோவன் ரவி பங்கேற்றனர்.
-நத்தம் :  நத்தத்தில்  நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி உதயசூரியா தேசியகொடியேற்றினார். நத்தம் வக்கீல்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார்  பங்கேற்றனர்.நத்தம் யூனியன் அலுவலகம் முன்பாக குடியரசு தின கொடியேற்று விழா நடந்தது. ஒன்றியகுழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி கொடியேற்றி காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தினார். யூனியன் கமிஷனர்கள் விஜயசந்திரிகா, சுமதி,துணைதலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர்.
நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா  தலைமை தாங்கி கொடியேற்றினார். தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி பங்கேற்றனர்
நத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமையா, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் லெட்சுமணன்,போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் ஜெயசீலன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன், ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ராமசாமி தேசியக் கொடியை ஏற்றினர்.
கொடைக்கானல் : நகராட்சியில் கமிஷனர் சத்தியநாதன் கொடியேற்றினார். நகராட்சித் தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தேசிய சிறுபான்மை நலவாரிய செயலர் வேலுார் இப்ராஹிம் பங்கேற்றார். கொடைக்கானல் வானியியற்பியல் மையத்தில் தலைமை பொறியாளர் ராஜலிங்கம் கொடியேற்றினார்.
கொடைக்கானல் ரோஜா பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி கொடியேற்றினார். பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலை உதவி அலுவலர் சிவபாண்டி கொடியேற்றினார்.  போக்குவரத்து கிளை அலுவலகத்தில் மேலாளர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் கொடியேற்றினார். கொடைக்கானல் ஆனந்தகிரி 6வது தெருவில் லயன்ஸ் இன்டர்நேஷனல் 324 துணை சேர்மன் டி.பி. ரவீந்திரன் கொடியேற்றினார். சன் லயன்ஸ் தலைவர் கண்ணன், செயலாளர் ராமலட்சுமி, பொருளாளர் பிச்சை, முன்னாள் தலைவர் ஆஷா ரவீந்திரன் பங்கேற்றனர்.
தாண்டிக்குடி: காபி ஆராய்ச்சி நிலையத்தில் துணை இயக்குனர் ஜெயக்குமார் கொடியேற்றினார்.  காபி வாரிய விரிவாக்கம் மையத்தில் முதுநிலை தொடர்பு அலுவலர் தங்கராஜ் கொடியேற்றினார். காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன்  பங்கேற்றனர். பண்ணைக்காடு விவேகானந்த மெட்ரிக் பள்ளியில்முதல்வர் ரஞ்சித் குமார் கொடியேற்றினார். பள்ளி செயலர் சுவாமி கங்காதாரனந்த பங்கேற்றனர். பண்ணைக்காடு பேரூராட்சியில் செயல் அலுவலர் சுதர்சன் கொடியேற்றினார். பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, துணைத்தலைவர் லதா பங்கேற்றனர். குப்பம்மாள்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோகிலா கொடி ஏற்றினார். ஊராட்சித் தலைவர் ஜீவா பங்கேற்றார். கே.சி. பட்டி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் ஜீவா கொடியேற்றினார். கே.சி.பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில்  செந்தில்குமார் எம்.எல்.ஏ., கொடியேற்றினார். தலைமையாசிரியர் பாலமுருகன் பங்கேற்றனர்.

