/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரகசிய திருமணம் முடித்த காதல் ஜோடி
/
ரகசிய திருமணம் முடித்த காதல் ஜோடி
ADDED : மே 27, 2025 01:24 AM
வடமதுரை: ரகசியமாக திருமணம் செய்த பின்னர் பெற்றோருடன் வசித்த கல்லுாரி மாணவியை காதல் கணவருடன் போலீசார் அனுப்பினர்.
வடமதுரை தும்மலக்குண்டை சேர்ந்தவர் சினேகா 21. கல்லுாரியில் முதல் ஆண்டு படிக்கிறார். கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்னேஷ் 21. இருவரும் பள்ளியில் படிக்கும்போதே காதலித்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் கோயம்புத்துாரில் திருமணம் செய்து கொண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு முன் பதிவு செய்தனர்.
திருமணம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் அவரவர் வீடுகளில் இருந்தனர். இந்நிலையில் சினேகா வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பது மும்முரமாக நடந்தது.
திருமணம் நடந்த விஷயம் வெளியே தெரிய , வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.