/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமியின் குடலில் சிக்கிய சேப்டி பின் அகற்றம்
/
சிறுமியின் குடலில் சிக்கிய சேப்டி பின் அகற்றம்
ADDED : ஜூன் 26, 2025 01:39 AM
திண்டுக்கல்: சிறுமியின் குடலில் சிக்கிய சேப்டி பின்  திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை  டாக்டர்களால்   அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த 13 வயது சிறுமி தாய், தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். மே 5ல் சிறுமி தவறுதலாக 'சேப்டி பின் ' ஐ விழுங்கிவிட்டார்.
வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவரை அங்கு மருத்துவமனையில்  சேர்த்தனர்.பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் வயிற்றில்  சேப்டி பின்  இருப்பதை பார்த்த  டாக்டர்கள்  அதை அகற்ற  3 முறை முயற்சி செய்தனர். சேப்டி பின் வாய் திறந்த நிலையில் குடலுக்குள் இருப்பதால் அதை அகற்ற முடியாது  என டாக்டர்கள் கூறி விட்டனர் . இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய  சிறுமிக்கு  மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது. பதட்டமடைந்த பெற்றோர், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்  சேர்த்தனர்.டாக்டர்கள் கார்த்திகா, கவிதா, செவந்து பிரித்திகா, பிரவீன் ஆகியோர் குடல் உள்நோக்கி மூலமாக சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து 'சேப்டி பின்' ஐ அகற்றினர். அவர்களை டாக்டர்களை டீன் சுகந்தி ராஜகுமாரி , மருத்துவக்கண்காணிப்பாளர் வீரமணி  பாராட்டினர். சிறுமியின் பெற்றோரும்  டாக்டர்களுக்கு நன்றி கூறினர்.

