/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கடத்தி வந்த கஞ்சா, குட்கா பறிமுதல்
/
கடத்தி வந்த கஞ்சா, குட்கா பறிமுதல்
ADDED : ஜூன் 16, 2025 02:04 AM
திண்டுக்கல்: தென் மாவட்டத்திற்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 4.3 கிலோ கஞ்சா, 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
புருலிய- - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா, குட்கா, மதுபாட்டில்கள் கடத்திவருவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்த ரயிலில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 2 பைகளில் 4 கிலோ 300 கிராம் கஞ்சா, 10 கிலோ குட்கா பதுக்கி வைத்து கடத்திவந்தது தெரிந்தது. விசாரணையில், அந்த பைகள் யாருடையது என தெரியவில்லை. ரயில்வே போலீசார் கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவிலும், குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். 2 மாதங்களில் ரயில் மூலமாக 100 கிலோவுக்கு மேல் கஞ்சா, குட்கா பொருட்கள் பிடிபட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் மூலமாக போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவதை தடுக்க ரயில்வேயில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.