/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் தைப்பூச விழா
/
முருகன் கோயில்களில் தைப்பூச விழா
ADDED : ஜன 26, 2024 05:44 AM

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை,வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல் கந்தக்கோட்டம் சுப்பிரமணி சுவாமி கோயிலில் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம்செய்யப்பட்டது. முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ரயிலடி சித்தி விநாயகர் கோயில் தாண்டாயுதபாணி, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அபிராமி அம்மன் கோயிலிலுள்ள முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.அதிகளவில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயில் தைப்பூச விழாவில் மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.கீழக்கோட்டை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் வழிபாடு நடந்தது அருள் விளக்கு ஏற்றி அகவல் பாராயணம், மகாதீபாராதனை நடந்தது.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச விசேஷ அபிஷேகம் ,தீபாராதனைகள் நடந்தது.
வடமதுரை : வடமதுரை சுப்பிரமணியசுவாமி, வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணியசுவாமி தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர், தென்னம் பட்டி பாலமுருகன், சுப்ரமணியசுவாமி கோயில் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு பால், பழம், சந்தனம்,இளநீர், உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள் நடந்தது.தொடர்ந்து முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. அருகில் உள்ள காமாட்சி மவுன குரு ஜீவசமாதி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் சுப்பிரமணிய சுவாமி சன்னிதியிலும்சிறப்பு பூஜைகள் நடந்தது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில், வி.மேட்டுப்பட்டி, அய்யாபட்டி முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பு பூஜைகள் நடந்தது.
கொடைக்கானல் : கொடைக்கானல் குறிஞ்சாண்டவர் கோயிலில் பக்தர்கள் 1008 தீர்த்தக் கலசம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது சப்பரத்தில் வலம் வந்த சுவாமியை பக்தர்கள் தரிசித்தனர். தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் பக்தர்களால் பல்வேறு நகரிலிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. மாலையில் தேரோட்டம் நடந்தது.
ஒட்டன்சத்திரம் : குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பலவகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதூர் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுற்று கிராமங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

