/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதாள செம்பு முருகன் கோயிலில் தைப்பூசம்
/
பாதாள செம்பு முருகன் கோயிலில் தைப்பூசம்
ADDED : ஜன 26, 2024 01:46 AM

ரெட்டியார்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பாதாளசெம்பு முருகன் கோயில் உள்ளது. இங்கு ஜன. 21 முதல் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று மூலவருக்கு பாலாபிஷேகம், ராஜ அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தன. முன்பதிவு செய்யாமல் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடக பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏராளமானோர் கருங்காலி மாலை வாங்கினர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், மோர் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு குபேர பூஜை செய்யப்பட்ட புதிய 20 ரூபாய் நோட்டுகளை நிர்வாகி அறிவானந்த சுவாமி வழங்கினார்.

