/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காடுபோல் மாறும் கண்மாய்கள்...அதிகாரிகள் அசட்டையால் அல்லல்
/
காடுபோல் மாறும் கண்மாய்கள்...அதிகாரிகள் அசட்டையால் அல்லல்
காடுபோல் மாறும் கண்மாய்கள்...அதிகாரிகள் அசட்டையால் அல்லல்
காடுபோல் மாறும் கண்மாய்கள்...அதிகாரிகள் அசட்டையால் அல்லல்
UPDATED : ஜூன் 19, 2025 09:09 AM
ADDED : ஜூன் 19, 2025 02:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமானளவு காண்மாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன.இதனை முறையாக பாராமரித்தாலே விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் .ஆனால் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை ,உள்ளாட்சிகள் எதையும் கண்டுக்காது துாக்கத்தில் உள்ளது.
ஆண்டுக்கணக்கில் துார்வாரப்படாமல் முள்புதர்கள் சூழ்ந்து காடுபோல் காட்சியளிக்கின்றன. விவசாயிகளும் குறை தீர் கூட்டம்தோறும் கோரியும் மாவட்ட நிர்வாகமும் பெயருக்கு கூட்டம் நடத்தி நேரம்,பணத்தை வீணடிக்கின்றன.இதற்கு செலவிடும் தொகையை கொண்டே பராமரித்திருக்கலாம் போலும்.