/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சப்பர நிறுத்தத்தில் பிரச்னை ஊர் மக்கள் போர்கொடி
/
சப்பர நிறுத்தத்தில் பிரச்னை ஊர் மக்கள் போர்கொடி
ADDED : பிப் 24, 2024 06:09 AM
திண்டுக்கல் : -அம்பாதுரை அருகே பெருமாள் கோவில்பட்டி காளியம்மன் கோயில் முன்பு கிறிஸ்தவ சப்பரத்தை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து ,திண்டுக்கல் ஏ.எம்.சி., ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஊர் மக்கள் திரண்டர்.
ஆத்துார் அம்பாதுரை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ஹிந்து வன்னியர்கள் 50க்கு மேற்பட்டோர் நேற்று(பிப்.23-) திண்டுக்கல் ஏ.எம்.சி., ரோட்டிலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். அதே ஊரை சேர்ந்த கிறிஸ்தவ வன்னியர்கள் ஊரின் மையத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு அருகில் சப்பரத்தை நிறுத்தாமல் வேறு இடத்தில் நிறுத்த ஆர்.டி.ஓ., உத்தரவிட வேண்டும். இந்த பிரச்னை 150 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. ஏற்கனவே ஆர்.டி.ஓ., தலைமையில் எடுக்கப்பட்ட அமைதி குழு கூட்டத்தின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ.,கமலகண்ணன் அளித்த வாக்குறுதிப்படி ஊர்மக்கள் கலைந்து சென்றனர்.