ADDED : ஜன 26, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த 18 பேர் பழநிக்கு சென்று விட்டு வேனில் ஊர் திரும்பினர்.
திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை கோப்பம்பட்டி பிரிவு சென்றபோது டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
டிரைவர் ராஜீவ் 32, வீரமணி 63, சத்யா 30, உட்பட 16 பேர் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

