ADDED : செப் 25, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் ரோட்டோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் பிரதமர் சுவாநிதி லோக் கல்யாண் மேலா (நாளை செப். 26) நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் ரோட்டோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், மற்றும் ஒழுங்குபடுத்த தேவையான நிதியை கடனாக பெறலாம்.
முகாம் அக்ரஹாரம் ஒற்றைத் தெருவில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடக்க உள்ளது.
இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்க உள்ளன.