நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை தென்னம்பட்டி கவுடர் தெருவை சேர்ந்த முருகன் 37. டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். டிராக்டர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விரக்தியாகி முருகன்,தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
சித்துவார்பட்டி: வடுகபட்டியை சேர்ந்த செல்வம் மகள் சந்தோஷினி 15. வடமதுரை தனியார்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.அரையாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்ற விரக்தியில் விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.

