/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேடு பள்ளங்களாக உருமாறிய வத்தலக்குண்டு மெயின் ரோடு ஆமை வேக பணிகளால் அல்லாடும் மக்கள்
/
மேடு பள்ளங்களாக உருமாறிய வத்தலக்குண்டு மெயின் ரோடு ஆமை வேக பணிகளால் அல்லாடும் மக்கள்
மேடு பள்ளங்களாக உருமாறிய வத்தலக்குண்டு மெயின் ரோடு ஆமை வேக பணிகளால் அல்லாடும் மக்கள்
மேடு பள்ளங்களாக உருமாறிய வத்தலக்குண்டு மெயின் ரோடு ஆமை வேக பணிகளால் அல்லாடும் மக்கள்
ADDED : ஜன 09, 2024 06:20 AM

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் மெயின் ரோடு மேடு பள்ளங்களாக இருப்பதால் நெடுஞ்சாலை துறையினர் ஆமை வேகத்தில் நடக்கும் ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து காளியம்மன் கோயில் வரையில் உள்ள அரை கிலோமீட்டர் துாரம் உள்ள ரோடு புதுப்பிக்கப்படும் பணி ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்டது. இருபுறமும் வடிகால் அமைத்து ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கின.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சில இடங்களில் அகற்றாமலும் வடிகால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
தற்போது காளியம்மன் கோயில் அருகே வடிகால் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேலாக வடிகால் கட்டும் பணி நடந்து வருவதால் ரோடு புதுப்பிக்கும் பணியும் நின்று போனது. இதனால் பல இடங்களில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.
சில இடங்களில் ஜல்லிக்கற்கள் ரோட்டோரத்தில் சிதறிக்கிடக்கின்றன. இதனால் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். வடிகால் கட்டுவதால் ரோடு மேலும் குறுகலாகி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. தற்போது பழநி, சபரிமலைக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வதால் குண்டும், குழியுமான ரோட்டில் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் மெயின் ரோட்டினை விரைவாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பக்தர்களுக்கு சிரமம்
பாண்டியன், தனியார் நிறுவன ஊழியர், வத்தலக்குண்டு: முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் ரோடு புதுப்பிக்கப்பட்டால் தான் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருவர். பாதயாத்திரை பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாது. நெடுஞ்சாலை துறை விரைவாக ரோட்டினை புதுப்பிக்க வேண்டும்.
தடுமாறி விழுகின்றனர்
முருகானந்தம், அச்சக உரிமையாளர் வத்தலக்குண்டு: மழை பெய்ததால் மேடு பள்ளமான ரோட்டில் அதிக பள்ளம் ஏற்பட்டுள்ளது. முதியோர் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
டூவீலர்களில் செல்வோர் ஜல்லிகளால் தடுமாறி விழ நேரிடுகிறது.
விரைவாக பணிகளை முடிக்க ஒப்பந்ததாரரிடம் நெடுஞ்சாலை துறையினர் கட்டாயப்படுத்த வேண்டும்.

