sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 27, 2024 06:47 AM

Google News

ADDED : ஜன 27, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 306 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஏராளமான மக்கள் பங்கேற்று தங்கள் பிரச்னைகளை தெரவித்தனர்.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஆதிசக்திநகர் விநாயகர் கோவில் அருகே ஊராட்சி தலைவர் லதா தர்மராஜ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தார். ஊராட்சியின் வளர்ச்சி பணிகள், பொதுநிதி செலவு, டெங்குகாய்ச்சல் தடுப்பு பணி உள்ளிட்ட விவாதம் நடந்தது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தையொட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த முத்துநகர், வேதாத்திரி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கண்டன பேனர்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஆத்துார்,கலிக்கம்பட்டி ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பூங்கொடி பங்கேற்றார்.

குட்டம் ஊராட்சி: கோட்டூரில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலைசாமி, பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர் தங்கவேல் வரவேற்றார். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தார். வேடசந்துார் தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், வட்டார மருத்துவர் பொன்.மகேஸ்வரி, மின் வாரிய உதவி பொறியாளர் கார்த்தி, ஊராட்சி துணைத் தலைவர் எ.பழனியம்மாள், தி.மு.க., நிர்வாகிகள் மணிமாறன், தேவ சகாயம், சாகுல் ஹமீது, முத்துக்கிருஷ்ணன், நாகப்பன், கார்த்திகேயன், சின்னான், ஆரோன், மாரிமுத்து, சிவசாமி, பழனிசாமி பங்கேற்றனர்.

தாண்டிக்குடி: கே.சி.பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ.,ஊராட்சித் தலைவர் ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் அபிராமி,தாசில்தார் கார்த்திகேயன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஐயப்பன் பங்கேற்றனர்.

ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள்,விடுபட்ட பட்டாதாரர்களுக்கு பட்டா வழங்கப்படும்,கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசினார். ஊராட்சி செயலர் ரெங்க ராஜேந்திரன் நன்றி கூறினார்.

-நத்தம் தாலுகா : செந்துறை ஊராட்சியில் குடியரசு தினவிழா கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சவரிமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அழகர்சாமி,ஊராட்சி செயலர் கருப்பையா பங்கேற்றனர். குடகிப்பட்டி ஊராட்சியில் தலைவர் ராஜேஸ்வரி அழகர்சாமி தலைமையில் நடந்தது. ஊராட்சி செயலர் செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.

பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தலைவர் தேன்மொழி முருகன் தலைமையிலும், சிறுகுடி ஊராட்சியில் தலைவர் கோகிலவாணிவீரராகவன் தலைமை வைத்தார்.ஊராட்சி செயலர் வீரபாண்டி ஆண்டறிக்கை வாசித்தார்.

வேலம்பட்டியில் தலைவர் கண்ணன் தலைமையிலும், சமுத்திராப்பட்டியில் தலைவர் அமராவதி சேது தலைமையிலும், புன்னப்பட்டி ஊராட்சி உழுப்பகுடியில் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையிலும், ரெட்டியபட்டி ஊராட்சியில் தலைவர் சாத்திபவுர் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

சாணார்பட்டி : திம்மணநல்லுார் ஊராட்சியில் தலைவர் கவிதா தர்மராஜன் தலைமையிலும், அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சியில் தலைவர் தேவி ராஜா சீனிவாசன் தலைமையிலும்,

கம்பிளியம்பட்டி ஊராட்சியில் தலைவர் விஜயா வீராச்சாமி தலைமையிலும், வேம்பார்பட்டி ஊராட்சியில் தலைவர் கந்தசாமி தலைமையிலும், கோம்பைப்பட்டி ஊராட்சியில் தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி தலைமையிலும், சாணார்பட்டி ஊராட்சியில் தலைவர் பொன் மீனாட்சி சுந்தரம் தலைமையிலும்,ராஜக்காபட்டி ஊராட்சியில் தலைவர் பராசக்தி முருகேசன் தலைமையிலும்,கூவனூத்து ஊராட்சியில் தலைவர் முத்துலட்சுமி சத்தியராஜ் தலைமையிலும், கணவாய்பட்டி ஊராட்சியில் தலைவர் நிஷா ராமகிருஷ்ணன் தலைமையிலும், செங்குறிச்சி ஊராட்சியில் தலைவர் மணிமாறன் தலைமையிலும்,மருநூத்து ஊராட்சியில் தலைவர் தங்கவேல் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us