Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோடை கால காட்டுத்தீக்கு காரணம் மனித நடவடிக்கை'தீ'ய நடவடிக்கையால் அழியும் வன வளம்-மண் வளம்

கோடை கால காட்டுத்தீக்கு காரணம் மனித நடவடிக்கை'தீ'ய நடவடிக்கையால் அழியும் வன வளம்-மண் வளம்

கோடை கால காட்டுத்தீக்கு காரணம் மனித நடவடிக்கை'தீ'ய நடவடிக்கையால் அழியும் வன வளம்-மண் வளம்


ADDED : ஏப் 01, 2025 01:29 AM

Follow on Google

ADDED : ஏப் 01, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோடை கால காட்டுத்தீக்கு காரணம் மனித நடவடிக்கை'தீ'ய நடவடிக்கையால் அழியும் வன வளம்-மண் வளம்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உட்பட வனப்பகுதியில் காட்டுத்தீயை தடுக்க, 694 கி.மீ., துாரத்துக்கு தீத்தடுப்பு கோடு அமைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாவட்ட வன அலுவலர் அப்பல நாயுடு கூறியதாவது: பொதுவாக கோடை காலத்தில் காட்டுத்தீ ஏற்படுகிறது. பல்வேறு காரணங்களால் நிகழ்கிறது. இயற்கையான காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான காட்டுத்தீ, மனித நடவடிக்கைகளால் நேரிடுகிறது. காடுகள் தீயால் பாதிக்கும்போது, வன வளம், மண் வளம் அழியும். வன விலங்குகளின் வாழ்விடம் அழிக்கப்படும் அல்லது மாறிவிடும். இதனால் வன விலங்குகள் காட்டைவிட்டு வெளியேறி, உணவு மற்றும் தண்ணீர் தேடி மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்து, மனித - விலங்குகள் மோதல் ஏற்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் காட்டுத்தீ தடுப்புக்காக வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள், முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு, 2024-25ம் ஆண்டில் காட்டுத்தீயை தடுக்க, 694 கி.மீ., துாரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈரோடு, சத்தி, ஆசனுார் என மூன்று வனப்பிரிவுகளுக்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, 93.81 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தவிர, வனத்தீயை தடுக்க, வனத்துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காட்டுத்தீயை கண்டறிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம். காட்டுத்தீ உள்ளிட்ட தகவல்களை, 18004251107 என்ற கட்டணமில்லா எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap