தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தி.மு.க., - நா.த.க., கடும் வாக்குவாதம்: போர்க்களமானது ஓட்டுச்சாவடி

தி.மு.க., - நா.த.க., கடும் வாக்குவாதம்: போர்க்களமானது ஓட்டுச்சாவடி

தி.மு.க., - நா.த.க., கடும் வாக்குவாதம்: போர்க்களமானது ஓட்டுச்சாவடி


ADDED : பிப் 06, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., - நா.த.க., கடும் வாக்குவாதம்: போர்க்களமானது ஓட்டுச்சாவடி

ஈரோடு,ஈரோட்டில், தி.மு.க.,-நா.த.க.,வினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஓட்டுச்சாவடி மையம் போர்க்களமானது.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் நேற்று மாலை, 4:30 மணியளவில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வெளியூர் நபர்களை நாம் தமிழர் கட்சியினர் அழைத்து வந்து, தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதாக, தி.மு.க.,வினர் புகார் தெரிவித்தனர். இதே போல், தி.மு.க.,வை சேர்ந்த இருவர், 40 கள்ள ஓட்டுகளை போட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டினர். இது, இரு தரப்பினரிடையே மோதல் போக்கை உருவாக்கி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஓட்டுச்சாவடி மையத்தில்

கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.இதையடுத்து இரு கட்சியினரும் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்துக்கு ஈரோடு எஸ்.பி., ஜவகர் வந்தார். தி.மு.க.,வினர் பிரச்னைகளை கூறி மறியலுக்கு முயன்றனர். போலீசார் மோதல் போக்கை தவிர்க்க, தி.மு.க.,வினர், நாம் தமிழர் கட்சியினரை அங்கிருந்து தனித்

தனியே அழைத்து சென்றனர்.இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிற மாவட்ட நபர்களான சசிகுமார், கவாஸ்கர், ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளர் லோகநாதன் ஆகியோரை விசாரணைக்காக வீரப்பன்சத்திரம் போலீசார் அழைத்து சென்றனர். ஒரு பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். வீரப்பன்சத்திரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us