தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்டத்தில் 3 மாதத்தில்896 பேருக்கு காசநோய் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 3 மாதத்தில்896 பேருக்கு காசநோய் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 3 மாதத்தில்896 பேருக்கு காசநோய் பாதிப்பு


ADDED : ஏப் 06, 2025 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டத்தில் 3 மாதத்தில்896 பேருக்கு காசநோய் பாதிப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில், 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் காசநோய் பாதிப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் பரிசோதனை, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 'காசநோய் இல்லா ஈரோடு' திட்டத்தில் மூன்று மாதங்களாக அந்தந்த பகுதி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தினமும் ஒரு பகுதியாக காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி சுகாதாரத்துறையினர் கூறியதாவது: காசநோய் நுரையீரல், மூளை, தண்டுவடத்தை தாக்கும். இது நீண்ட நாள் இருமல், அருமலில் ரத்தம் வருதல், மார்பு சளி, சுவாசி பாதிப்பு, எடை இழப்பு, பசியின்மை, இரவ நேரத்தில் வியர்வை, காய்ச்சல் உடல் வலி போன்ற பல்வேறு அறிகுறி மூலம் கண்டறியலாம். அதுபோன்ற பாதிப்பு உள்ளோர், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி பரிசோதனை செய்தும், நெஞ்சக ஊடுகதிர் பரிசோதனை மூலமும் கண்டறியலாம். இவ்வாறான முகாம், பரிசோதனை கடந்த மூன்று மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 19,600 பேருக்கு சளி பரிசோதனை செய்து, 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சை மூலம் இதுவரை, 877 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கடந்தாண்டுகளைவிட இந்தாண்டு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us