/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி
/
டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி
ADDED : ஜூலை 14, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த செங்காளிபாளையத்தை சேர்ந்த முத்துச்-சாமி மகன் சுரேந்தர், 20; அதே பகுதியை சேர்ந்தவர் மோகன் பிரசாத், 22; இருவரும் டிராக்டரில் நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
டிராக்டரை சுரேந்தர் ஓட்டி சென்றார். கோவை சாலையில் மேட்டுக்கடை அருகே சென்றபோது, கோவையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ், டிராக்டர் மீது மோதியது. டிராக்டரில் சிக்கிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, பல்-லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர் பரிசோத-னையில் சுரேந்தர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மோகன் பிரசாத் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி குண்-டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.