/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
நாட்டு சர்க்கரை ஏலம் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 14, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி :கவுந்தப்பாடியில் நாட்டு சர்க்கரை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நாட்டு சர்க்கரை ஏலம் நடப்பதாக, அத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பழநி கோவில் தேவஸ்-தான நிர்வாகம் கொள்முதல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்-டது. இதனால், 1,795 நாட்டு சர்க்கரை மூட்டை வரத்தானது. ஆனால், பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் ஏலத்தில் பங்-கேற்கவில்லை. இதனால் வரும், 16ம் தேதிக்கு ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.