/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேன் மீது கார் மோதியதில் பெண் பலி; ௨ பேர் 'சீரியஸ்'
/
வேன் மீது கார் மோதியதில் பெண் பலி; ௨ பேர் 'சீரியஸ்'
வேன் மீது கார் மோதியதில் பெண் பலி; ௨ பேர் 'சீரியஸ்'
வேன் மீது கார் மோதியதில் பெண் பலி; ௨ பேர் 'சீரியஸ்'
ADDED : ஜூலை 14, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே குள்ளம்பாளையம் பிரிவை கடந்து, ஈரோடு சாலையில், வேகன்-ஆர் கார், நேற்று மதியம், 3:00 மணிக்கு சென்றது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் வேன், சாலையின் இடதுபுறம் திடீரென திரும்பியது. இதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத கார், வேனின் பின்பக்கத்தில் மோதியது. காரில் பயணித்த கோபி அருகே நாகர்பாளையத்தை சேர்ந்த, சந்திராவதி, 40, லாரன்ஸ், 52, விக்டோரியா, 42, பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்காக மூவரும் கோவை தனியார் மருத்-துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சந்திரா-வதி இறந்து விட்டார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்