ADDED : ஜூலை 17, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:அவல்பூந்துறை, பாரதி நகரை சேர்ந்தவர் உதயராஜா. பட்டி அமைத்து ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன் தினம் இரவு பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள், ஆடுகளை சரமாரியாக கடித்து குதறின.
இதில் குட்டிகள் உள்பட, ௧௦ ஆடுகள் பலியாகி விட்டன. இதனால் அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர். கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.