ADDED : ஜூலை 14, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில், ௬௨ மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-1.20, பெருந்துறை-3, சென்னி-மலை-4, கவுந்தப்பாடி-6.40, அம்மாபேட்டை-9.40, வரட்டு-பள்ளம்-8.40, எலந்தகுட்டை மேடு- 23.60, கொடிவேரி-11.20, குண்டேரிபள்ளம்-2.20, பவானிசாகர்-1.80. மழையால் கோபியில் ஒரு வீடு இடிந்து சேதமானது.