/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் நீர்மட்டம் 2 நாளில் 8 அடி உயர்வு
/
பவானிசாகர் நீர்மட்டம் 2 நாளில் 8 அடி உயர்வு
ADDED : ஜூலை 19, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் சில நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. இதனால் பில்லுார் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில்
திறக்கப்பட்டுள்ளது.
அந்த நீரானது பவானிசாகர் அணைக்கு வந்து சேர்க்கிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று மாலை நீர்வரத்து, 16 ஆயிரத்து 652 கன அடியாக இருந்தது. கடந்த, 16ல் 70.78 அடியாக இருந்த நீர்மட்டம், 78.71 அடியாக நேற்று மாலை உயர்ந்தது. அதாவது இரண்டு நாளில் எட்டு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.