/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.ஹெச்.,ல் பெண் ஏட்டுக்கு பாலியல்தொந்தரவு; வார்டு செக்யூரிட்டி கைது

ADDED : ஜூலை 17, 2024 02:27 AM
பெருந்துறை;சேலம் மாவட்டம் மேட்டூர், அனைத்து மகளிர் காவல் நிலைய, 33 வயது போலீஸ் ஏட்டு பணிபுரிகிறார். ஸ்டேஷனில் தொடரப்பட்ட போக்சோ சட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பாதுகாப்பு பணியில், அந்த ஏட்டும், கருமலைக்கூடல் ஸ்டேஷன் ஏட்டு பிரகாஷ் இருந்தனர்.
ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த ஏட்டு, நேற்று அதிகாலை, ஓய்வெடுக்க மகப்பேறு பிரிவில் படுத்திருந்தார். அப்போது டி.பி., வார்டில் செக்யூரிட்டியாக பணியில் இருந்த மோகன்ராஜ், 28, வார்டில் நுழைந்து ஏட்டுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசில், அந்த ஏட்டு புகார் செய்தார். விசாரித்த போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். அவர் பெருந்துறை அடுத்த, பெரியமடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.