/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கலெக்டரின் 'தபேதார்' மர்மச்சாவு
/
ஈரோடு கலெக்டரின் 'தபேதார்' மர்மச்சாவு
ADDED : ஜூலை 14, 2024 03:40 AM
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு கலெக்டரின் 'தபேதார்' மர்மமாக இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்த புதுப்பீர் கடவை சேர்ந்தவர் வைத்தீஸ், 26; ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில் நான்கு வருடமாக கலெக்டரின் தபேதராக பணிபுரிந்தார். இவரின் மனைவி கவுசல்யா, 25; இரு பெண் குழந்தைகள் உள்-ளன. பணி முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:௦௦ மணிக்கு வீட்டுக்கு வந்தார். நேற்று காலை, 9:௦௦ மணிக்கு மனைவி கவு-சல்யா எழுப்ப சென்றார். அப்போது மூக்கில் நுரையுடன் கிடந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சத்தி அரசு மருத்துவ-மனைக்கு அவரை கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோத-னையில் வைத்தீஸ் ஏற்கவனவே இறந்து விட்டது தெரிந்தது.
இதையறிந்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சத்தி அரசு மருத்து-வமனைக்கு விரைந்தார். வைத்தீஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்-தினார். பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு வைத்தீஸ் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டில் துாங்க சென்ற தபேதார் மர்ம-மாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறு பரிசோ-தனை அறிக்கை வந்த பின்னரே, இறப்புக்கான காரணம் தெரிய வரும் என பவானிசாகர் போலீசார்
தெரிவித்தனர்.