/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் கைது
/
ஆடிட்டர் வீட்டு திருட்டில் மேலும் ஒருவர் கைது
ADDED : ஜூலை 19, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ.காலனி ஏழாவது வீதியை சேர்ந்த ஆடிட்டர் சுப்பிரமணி, 69; இவரின் வீட்டில் கடந்த மாதம், 8ம் தேதி, 235 பவுன் நகை, 48 லட்சம் ரூபாய் திருட்டு போனது.
இது தொடர்பான விசாரணையில், ஏற்கனவே மூன்று பேரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு கார், 19 லட்சம் ரூபாயும், 90 பவுன் நகைகளை மீட்டனர்.
இந்நிலையில் ஆம்பூர், விண்ணமங்கலம், கென்னடிகுப்பம் கோவில் வீதியை சேர்ந்த டிரைவர் குமரனை, 40, நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 42 பவுன் நகை, 7 லட்சம் ரூபாயை பறிமுதல்
செய்தனர்.