/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று மாவீரன் பொல்லான் நினைவு தினம்:சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் அறிக்கை
/
இன்று மாவீரன் பொல்லான் நினைவு தினம்:சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் அறிக்கை
இன்று மாவீரன் பொல்லான் நினைவு தினம்:சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் அறிக்கை
இன்று மாவீரன் பொல்லான் நினைவு தினம்:சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் அறிக்கை
ADDED : ஜூலை 17, 2024 02:25 AM
ஈரோடு;சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு நாள், இன்று அனுசரிக்கப்படும் நிலையில், சமூகநீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய விடுதலை போராட்டத்தில், கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து, தீரன் சின்னமலையுடன் இணைந்து போரிட்டவர் மாவீரர் பொல்லான். பிரிட்டிஷ் ராணுவ ரகசியங்களை, தீரன் சின்னமலைக்கு மாறு வேடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். இதனால், 1801 காவிரி கரைப்போர், 1802 அரச்சாலையூர் போர், 1804 ஓடாநிலை போர்களில் தீரன் சின்னமலை வெற்றிக்கு, பொல்லான் முக்கிய பங்கு வகித்தார். இதையறிந்த பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஆடி, 1ம் தேதி அரச்சலுாரை அடுத்த நல்லமங்காபாளையத்தில், பொல்லானை தலைகீழாக கட்டி கொன்றனர்.
மாவீரன் பொல்லானுக்கு அரசு மரியாதை செலுத்த, சென்னை உயர்நீதிமன்றத்தில், நான் தொடர்ந்த வழக்கில், 2019ல் தீர்ப்பானது. இந்த வகையில் மாவீரன் பொல்லானின், 219ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, அரச்சலுார் நல்லமங்காபாளையத்தில் இன்று நடக்கிறது. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு இயக்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பொதுமக்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.