/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபியில் 20 வீடுகளில் வெள்ளம் புகுந்தது
/
கோபியில் 20 வீடுகளில் வெள்ளம் புகுந்தது
ADDED : ஜூலை 13, 2024 08:09 AM
கோபி: கோபியில் பலத்த மழையால், 20 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்-ததால், மக்கள் அவதிக்கு ஆளாகினர்.கோபி நகராட்சிக்கு உட்பட்ட கடை வீதி, குடியிருப்பு மற்றும் ஓட்டல்களின் கழிவுநீர், நகரின் மையப்பகுதியில் செல்லும் கீரிப்-பள்ள ஓடையில் செல்கிறது.
அதில் தினமும் சராசரியாக, 150 கன அடி வரை கழிவுநீர் சென்று, பாரியூர் அருகே பதி என்ற இடத்தில், தடப்பள்ளி வாய்க்காலில் கலக்கிறது. நகராட்சி சார்பில், 14 கோடி ரூபாயில், கசடு மற்றும் கழிவு சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பு பணி, கபிலர் வீதி மற்றும் வீராசாமி வீதி அருகே கீரிப்பள்ளம் ஓடை குறுக்கே கடந்தாண்டில் துவங்கியது. ஆனால், பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் மழைக்காலத்தில் ஓடையை ஒட்டியுள்ள குடியிருப்-புக்குள், மழைநீர் புகும் அபாயம் உள்ளதாக, நமது நாளிதழில் பிரசுரித்து எச்சரிக்கை செய்தோம். இதன் பிறகும் நகராட்சி நிர்-வாகம் மெத்தனத்தை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று மதியம், 3:45 முதல், மாலை 4:30 மணி வரை, கோபி டவுன் பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுத்திக-ரிப்பு நிலையம் கட்டமைப்புக்காக கொட்டியிருந்த மண் மேடையால், மழைநீர் சீராக பயணிக்க வழியின்றி, ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதியில், 20 வீடுகளுக்குள் புகுந்தது. நக-ராட்சி பொறியாளர் சிவக்குமார் அடங்கிய குழுவினர், மழைநீர் வெளியேற வழி செய்தனர். மழைக்காலத்தில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகாத வகையில், ஓடை அமைந்துள்ள பகுதியில், தடுப்புச்சுவர் அமைக்க, ஊஞ்சக்-காட்டு மாரியம்மன் கோவில் வீதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.