/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பார்மசி கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு
/
ஈரோடு பார்மசி கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு
ஈரோடு பார்மசி கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு
ஈரோடு பார்மசி கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு
ADDED : ஜூலை 02, 2025 01:35 AM
ஈரோடு, ஈரோடு, வேப்பம்பாளையத்தில் உள்ள தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மசியில், இ.சி.பி.சி.ஓ.என்., எனப்படும் இக்பான் சர்வதேச மூன்று நாள் கருத்தரங்கு தொடங்கியது. சிறப்பு விருந்தினராக சேலம் வினாயகா மிஷன்ஸ் மருந்தியல் கவுன்சில் உறுப்பினர் ஜெயகர் கலந்து கொண்டார். கல்லுாரி செயலாளர் நடராஜன், தலைவர் ஜெகநாதன், துணைத்தலைவர் தங்கமுத்து, பொருளாளர் கொழந்தசாமி, அறக்கட்டளை உறுப்பினர் பிரவீன்குமார் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பேசினர். கல்லுாரி முதல்வர் சம்பத்குமார் கூட்டத்தை தொடங்கி வைத்து, மாநாட்டின் நோக்கத்தை விளக்கி பேசினார். நேற்று முன்தினம் தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.
பல்வேறு கல்லுாரி துறை தலைவர்கள், ஆசிரியர் மதிப்பாய்வாளர், ஊடகப் பிரதிநிதிகள் உள்பட, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பார்மஸி கல்வி நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி பேராசிரியர் கண்ணன், மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டை செய்திருந்தார். கல்லுாரி துணை முதல்வர் சரவணன் நன்றி கூறினார்.