/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2க்கு ரூ.10 ஆயிரம் காணிக்கை 55 ஆண்டுகளுக்கு பிறகு வினோதம்
/
ரூ.2க்கு ரூ.10 ஆயிரம் காணிக்கை 55 ஆண்டுகளுக்கு பிறகு வினோதம்
ரூ.2க்கு ரூ.10 ஆயிரம் காணிக்கை 55 ஆண்டுகளுக்கு பிறகு வினோதம்
ரூ.2க்கு ரூ.10 ஆயிரம் காணிக்கை 55 ஆண்டுகளுக்கு பிறகு வினோதம்
ADDED : ஜூலை 02, 2025 01:16 AM
பவானி, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையில் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது.
இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, 10 ஆயிரம் பணம் மொத்தமாக போடப்பட்டு, அத்துடன் ஒரு கடிதம் இருந்தது. அதில், 'கடந்த, 55 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு வந்த ஒருவர், வரும் வழியில், இரண்டு ரூபாய் கண்டெடுத்துள்ளார்.
அதை உரிய நபரிடம் ஒப்படைக்க முடியாததால் பணத்தை எடுத்து சென்றுள்ளார். 55 ஆண்டு கழித்து மீண்டும் கோவிலுக்கு வந்தவர், கண்டெடுத்த இரண்டு ரூபாய்க்கு ஈடாக, இன்றைய தேதி வரையில் தோராய மதிப்பாக, 10,000 ரூபாயை காணிக்கையாக செலுத்துகிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தில் பெயர், விலாசம் குறிப்பிடப்படவில்லை. உண்டியல் எண்ணிக்கை முடிவில், 62 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. கண்டெடுத்த இரண்டு ரூபாய்க்கு ஈடாக, ௧௦ ஆயிரம் ரூபாயை, ௫௫ ஆண்டுகள் கழித்து உண்டியலில் செலுத்திய பக்தர், உண்மையிலேயே வித்தியாசமான ஆள்தான். வினோத வழிபாடு அல்லது வினோத நேர்த்திக்கடன் என்று, இந்த செயலை தாராளமாக சொல்லலாம் என்றும், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொண்டனர்.