/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை துவக்கம்
/
ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை துவக்கம்
ADDED : ஜன 18, 2024 01:39 PM

மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்
மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் நேற்று முன் தினம் (ஜன 10) ஈரோட்டை வந்தடைந்தது. இன்றைய தின யாத்திரையை ஈரோடு மேயர் திருமதி. நாகரத்தினம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்தாண்டு மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச்-8 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
இந்த ரத யாத்திரையை பேரூர் ஆதீனம் அவர்கள் கோவை ஈஷா யோக மையத்தில் ஜன 5-ம் தேதி தொடங்கி வைத்தார். அங்கு இருந்து புறப்பட்ட ஒரு ரதம் நேற்று முன் தினம் ஈரோட்டை வந்தடைந்தது. இதை தொடர்ந்து எம்.எஸ்.கே மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. ஆனந்த் மற்றும் ஒயாசிஸ் ஓட்டல் உரிமையாளர் திரு. சிவசங்கர் உள்ளிட்டோர் ஆரத்தியுடன் ஆதியோகி ரத யாத்திரையை நேற்று காலை தொடங்கி வைத்தனர். இந்த ரதம் அரசு மருத்துவமனை ரவுண்டானா, பெரிய மாரியம்மன் கோவில், லோட்டஸ் மருத்துவமனை பகுதி, ஈரோடு ரயில் நிலையம், வலசு மாரியம்மன் கோவில் என பல பகுதிகளில் இரவு 8 மணி வரை வலம் வந்தது.
இதனை தொடர்ந்து, ஆதியோகி ரதத்தின் இன்றைய யாத்திரையை ஈரோடு மேயர் திருமதி.நாகரத்தினம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ரதம் சத்தி சாலையில் உள்ள டிமார்ட், வில்லரசம்பட்டி மற்றும் ஈரோடு ஈஷா வித்யா பள்ளி உள்ளிட்ட பகுதிகளை வலம் வந்து மாலை கோபிசெட்டிபாளையம் செல்கிறது. மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்த ஆதியோகி ரதத்திற்கு பொதுமக்கள், ஈஷா தன்னார்வலர்கள் பக்தர்கள் என அனைவரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த ரதம் ஜனவரி 16-ம் தேதி வரை கோபியின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க உள்ளது.
முன்னதாக ஜன 5-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்திலிருந்து புறப்பட்ட 4 ஆதியோகி ரதங்கள் தமிழகத்தின் 4 திசைகளிலும் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகியை பூ, பழம் மற்றும் ஆரத்தி உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து சிறப்பாக வரவேற்க உள்ளனர். ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு திசையில் பயணித்து அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்து பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளன. ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே தரிசிப்பதற்கு வாய்ப்பாக இந்த ரத யாத்திரை அமைகிறது.

