ADDED : ஜூன் 20, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே அம்மாபேட்டை, ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் கனகராஜ், 52; கடந்த, 1995ல் காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார்
. பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றினார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக அந்தியூர் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தார். ஒரு மாதமாக உடல் நிலை சரியின்றி மருத்துவ விடுப்பில் இருந்தவர் நேற்று இறந்தார். மறைவுக்கு சக போலீசார், உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.