/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆவின் கால்நடை தீவன ஆலையில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
/
ஆவின் கால்நடை தீவன ஆலையில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
ஆவின் கால்நடை தீவன ஆலையில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
ஆவின் கால்நடை தீவன ஆலையில் சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
ADDED : ஜன 11, 2024 11:29 AM
ஈரோடு: தமிழக சட்டசபை உறுதி மொழிக்குழு தலைவர் பண்ருட்டி
எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்தனர். ஈரோடு தீயணைப்பு நிலையம், அவர்களுக்கான புதிய குடியிருப்பை ஆய்வு செய்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பின், ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலையை ஆய்வு செய்தனர்.
அவர்களிடம், ஆலை அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த, 1980ல் தினமும், 100 டன் திறன் கொண்ட கால்நடை தீவன உற்பத்தி தொழிற்சாலையாக நிறுவப்பட்டு, கலப்பு தீவனம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2017 மார்ச் 18 முதல் தினமும், 150 டன்னாக உற்பத்தி உயர்த்தப்பட்டு, அதற்கான இயந்திரங்கள், குடோன்கள் நிறுவப்பட்டன. மாநில அளவில் உள்ள, 27 ஆவின் ஒன்றியத்துக்கும் இங்கிருந்து கலப்பு தீவனம் அனுப்பி வைக்கப்படுகிறது,' என்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் அருள், ரூபி.ஆர்.மனோகரன், மோகன், விஸ்வ நாதன், ஜெயகுமார், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உட்பட பலர் பங்கேற்றனர். ஆய்வுக்கு பின் வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள, 27 ஆவின் ஒன்றியங்களுக்கு உள்பட்ட பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தேவையான கலப்பு தீவனங்கள் நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு
வந்தது.
இதன் உற்பத்தியை மேலும் 150 டன் சேர்த்து நாளொன்றுக்கு, 300 டன்னாக அதிகரிக்கும் பொருட்டு, 240 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கூடுதல் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன,” என்றார்.

