/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிசியோதெரபிஸ்ட் மீது தாக்குதல்; 4 பேருக்கு காப்பு
/
பிசியோதெரபிஸ்ட் மீது தாக்குதல்; 4 பேருக்கு காப்பு
ADDED : மே 29, 2025 01:22 AM
ஈரோடு, ஈரோட்டில், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பிசியோதெரபிஸ்ட்டை அடித்து உதைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு செட்டிபாளையத்தில், பிசியோ
தெரபி மையம் வைத்துள்ளவர் பிரகாஷ், 49. மையத்தில் பணிக்கு வந்த, 25 வயது இளம் பெண்ணிடம் கடந்த, 26 மதியம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இது
குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், பிரகாஷை அடித்து உதைத்தனர். இது தொடர்பாக பிரகாஷ் கொடுத்த புகார்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து குமாரபாளையத்தை சேர்ந்த கார்த்திக், 27. கோவை டி.என்.புதுாரை சேர்ந்த குகன், 21. சேலம் வாழப்பாடியை சேர்ந்த தினேஷ் குமார், 27 மற்றும் குமாரபாளையத்தை சேர்ந்த ஹரிணி, 24, ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

