/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜவுளி கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி: வர்த்தகர்கள் அதிர்ச்சி
/
ஜவுளி கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி: வர்த்தகர்கள் அதிர்ச்சி
ஜவுளி கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி: வர்த்தகர்கள் அதிர்ச்சி
ஜவுளி கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி: வர்த்தகர்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 10, 2024 10:57 AM
ஈரோடு: ஈரோட்டில், ஜவுளி கடையின் பூட்டை உடைத்து திருட நடந்த முயற்சி வர்த்தகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, பிருந்தா வீதியில் உள்ள கணபதி சில்க்ஸ் மற்றும் ரெடிமேட் கடை, ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட துதா ராமிற்கு, 38, சொந்தமானது. இவர் கடையின் பின்புறம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் துதா ராம், ராஜஸ்தான் சென்றுள்ளார். கடையை ஊழியர் ரூபா ராம் பார்த்து கொள்கிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், 10:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றார்.
காலை, 8:30 மணிக்கு வந்து பார்த்த போது, கடையின் முன்புற ஷட்டரின் இருபுறத்திலும் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. நடுவில் இருந்த லாக்கர் பூட்டை மர்ம நபர்களால் உடைக்க முடியவில்லை.
இதனால் பூட்டை உடைக்க பயன்படுத்திய, இரு இரும்பு கம்பிகளை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். கடையில் இருந்த 'சிசிடிவி' கேமரா ஆப் செய்யப்பட்டு இருந்தது.
ஈரோடு டவுன் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடைக்கு எதிரே உள்ள 'சிசிடிவி' கேமராவை கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர். இக்கடைக்கு சில அடி துாரம் உள்ள, டீக்கடையின் பூட்டை உடைத்து நேற்று முன்தினம் மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்து சென்று விட்டனர்.
பிருந்தா வீதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், சமீப நாட்களாக சுற்றித்திரியும் திருடர்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

