/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாவடி நிலம் ஆக்கிரமிப்பு; நடவடிக்கை கோரி மனு
/
பாவடி நிலம் ஆக்கிரமிப்பு; நடவடிக்கை கோரி மனு
ADDED : ஜூலை 16, 2024 01:34 AM
ஈரோடு: பெருந்துறை, மேக்கூர் முதலியார் வீதியை சேர்ந்த செங்குந்த சமுதாய இன மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் முதலியார் வீதியில், இச்சமுதாயத்துக்கு சொந்தமான, 40 சென்ட் பாவடி இடம் உள்ளது.
இவ்விடத்தை கள்ளியம்புதுார் சாலையில் வசிக்கும் சிலர் ஆக்கிரமித்து, சுவர் எழுப்பி தடை ஏற்படுத்துகின்றனர். அவ்விடத்தில் மது குடிப்பது, பெண்களை கேலி செய்வது என விரும்ப தகாத செயல்களில் ஈடு-படுகின்றனர். இதுபற்றி பெருந்துறை போலீசில் புகார் செய்து, ஏழு வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன. இதற்கு சில பஞ்., வார்டு உறுப்பினர்களும் துணை போகின்-றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பாவடி நிலத்தை மீட்க வேண்டும். இவ்வாறு கூறினர்.