/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேகத்தடை அமைக்க பா.ஜ., சார்பில் மனு
/
வேகத்தடை அமைக்க பா.ஜ., சார்பில் மனு
ADDED : ஜூன் 06, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம், நெடுஞ்சாலை அலுவலகத்தில், திருப்பூர் மாவட்ட பா.ஜ., துணை தலைவர் மீனாட்சி கோவிந்தசாமி, நகர தலைவர் ரங்கநாயகி ஆகியோர், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:
தாராபுரம்-அலங்கியம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக சாலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன், கிழக்குபுற சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.