ADDED : மே 11, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திர மகா அபிஷேக விழா இன்றும், சித்ரா பவுர்ணமி விழா நாளையும் நடக்கிறது.
இதையொட்டி இரு நாட்களும், பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதை வழியாக, கோவில் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும். அதே சமயம் மலைப்பாதை விரிவாக்க பணி நடப்பதால், கார், பைக் செல்ல அனுமதி இல்லை. இத்தகவலை கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் பழனிவேலு தெரிவித்துள்ளார்.

