/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் 'சுர்'; விவசாயிகள் 'கப்-சிப்'
/
குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் 'சுர்'; விவசாயிகள் 'கப்-சிப்'
குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் 'சுர்'; விவசாயிகள் 'கப்-சிப்'
குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் 'சுர்'; விவசாயிகள் 'கப்-சிப்'
ADDED : ஜூன் 29, 2024 02:47 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், நேற்று நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு: கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம் நல்லசாமி: பவானிசாகர் அணைக்கு போதிய நீர் வரத்து இல்லை. அணையில் நீர் மட்டம் குறைவாக உள்ளது. கடந்தாண்டு முறையான திட்டமிடல் இன்றி, 4ம் நனைப்புக்கு, இரண்டரை நாளும், 5ம் நனைப்புக்கு முழுமையாக தண்ணீர் விடாமல், பயிர்கள் காய்ந்து விவசாயிகள் பாதித்தன. தற்போது அணை நிரம்பிய பின், காவிரி இறுதி தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க வேண்டும்.
* மேட்டூர் வலசு கரை வாய்க்கால் பாசன சங்கம் பழனிசாமி: காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையத்தில் சாயக்கழிவு நீர் இரவில் வெளியேற்றுவதை தடுக்க வேண்டும். பவானி, குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் குதிரை, காட்டுபன்றி, தெரு நாய்களால் பாதிப்பு அதிகரித்துள்ளது.
* தமிழக விவசாயிகள் சங்கம் பெரியசாமி: கீழ்பவானியில் ஆக., 16ல் தண்ணீர் திறக்க வேண்டும். அவசரப்படாமல் அணையில் நீர்மட்டம் உயர்ந்த பின் திறக்கலாம். ஈரோடு உழவர் சந்தையில் அதிகமாக தவறு நடக்கிறது. கலெக்டர் ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையை அரசு அறிவித்த போதிலும், இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும். குளம், குட்டை, ஏரி, அணையில் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.